உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  7,042 கோடி ரூபாய் துணை மதிப்பீடு மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல் 

 7,042 கோடி ரூபாய் துணை மதிப்பீடு மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல் 

பெங்களூரு: கர்நாடகாவில், 2026 - 2027ம் நிதி ஆண்டின், முதல் தவணைக்கான, 7,042 கோடி ரூபாய் துணை மதிப்பீட்டிற்கு, சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம், 2026 - 2027ம் நிதியாண்டின் முதல் தவணைக்கான, 7,042 கோடி ரூபாய் துணை மதிப்பீட்டிற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முன்னாள் அமைச்சர் டி.சுதாகர் மருத்துவ செலவு தொகை 1.20 கோடி ரூபாய்; புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 38.25 லட்சம் ரூபாய்; எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக 57 கோடி ரூபாய். மேலும், குமாரகிருபா விருந்தினர் மாளிகை புனரமைப்புக்கு 79.50 லட்சம் ரூபாய்; ஜி ராம் ஜி திட்டத்திற்காக அரசின் பங்கு 1,169 கோடி ரூபாய்; கிராமப்புறங்களுக்கு அவசர குடிநீருக்காக 289 கோடி ரூபாய். சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைமை கொறடாவுக்கு புதிய கார் வாங்க, 64 லட்சம் ரூபாய் செலவு செய்தது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மசோதா, அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை