மேலும் செய்திகள்
பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்
40 minutes ago
போக்குவரத்து துறைக்கு ரூ.7,000 கோடி நிதியுதவி
46 minutes ago
பெண்ணுக்கு கொடுமை போலீசார் மீது குற்றச்சாட்டு
47 minutes ago
பல்லாரி: சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர ரெட்டி, ரேணுகாச்சாரியா உட்பட, பா.ஜ.,வினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து, 'பல்லாரி சல ோ ' என்ற பெயரில், கடந்த 1ம் தேதி ராய்ச்சூரில் இருந்து பா.ஜ., தலைவர் பாதயாத்திரை துவங்கினர். பத்து நாட்கள் நடந்த பாதயாத்திரை, கடந்த 10ம் தேதி பல்லாரியில் நிறைவு பெற்றது. பிரம்மாண்ட பொது கூட்டம் நடந்தது. அனுமதிக்கப்படாத பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.,வினருக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர ரெட்டி, ரேணுகாச்சாரியா தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்து வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக சோமசேகர ரெட்டி, ரேணுகாச்சாரியா உள்ளிட்ட 22 பேர் மீது பல்லாரி ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக நேற்று தெரிவித்தனர்.
40 minutes ago
46 minutes ago
47 minutes ago