உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி ராம்பிரசாத் மனோகர் தலைமையில் குழு

கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி ராம்பிரசாத் மனோகர் தலைமையில் குழு

பெங்களூரு.: ''மைசூரு தசராவின் போது, கே.ஆர்.எஸ்., அணையில், 'காவிரி ஆரத்தி' விழா நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் அரசு குழு அமைத்து உள்ளது. உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை மேலும் மேம்படுத்த, மாநிலத்தின் உயிர் நாடியான கே.ஆர்.எஸ்., அணையில், 'காவிரி ஆரத்தி' விழா நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாண்டியா மாவட்ட பொறுப்பு வகிக்கும் விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி தலைமையில் ஏற்கனவே உயர்மட்ட குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினர், கடந்தாண்டு காசிக்கு சென்று கங்கா ஆரத்தி தொடர்பாக ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.இக்குழுவின் ஆலோசனைகளை செயல்படுத்த, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் 'காவிரி ஆரத்தி குழு' அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி நடத்துவது தொடர்பாக சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்க, 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:காவிரி ஆரத்தி திட்டக்குழு தலைவராக என்னை நியமித்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி. எங்கள் குழு மீது நம்பிக்கை வைத்து, இவ்வளவு முக்கியமான பொறுப்பை வழங்கி உள்ளனர்.காவிரி அன்னைக்கு மரியாதை செலுத்தும் துணை முதல்வர் சிவகுமாரின் லட்சிய கனவு திட்டத்தை செயல்படுத்த எங்கள் குழு பாடுபடும். இந்நிகழ்வை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை