மோசடி பணத்தில் சினிமா ஐஸ்வர்யா கவுடா திட்டம்
பெங்களூரு:' காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா, திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது, சி.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்துள்ளது.மாண்டியாவின் மலவள்ளி கிருகாவலு கிராமத்தின் ஐஸ்வர்யா கவுடா, 33. இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் இருந்து நகைகளை வாங்கி, பணம் கொடுக்காமல் ஏமாற்றினார்.கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா மீது, மோசடி புகார்கள் குவிந்தன. ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி, பலரிடம் பணத்தை, 'ஆட்டை' போட்டது தெரிந்தது.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.ஐஸ்வர்யா செய்த மோசடிகளை விசாரிக்க, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. டி.எஸ்.பி., அஞ்சுமாலா நாயக் தலைமையிலான குழு விசாரிக்கிறது.இந்நிலையில் மோசடி செய்த பணத்தை வைத்து, 'பங்காரி கவுடா' என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்க, ஐஸ்வர்யா திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு, டி.எஸ்.பி., அஞ்சுமாலா நாயக் கடிதம் எழுதி உள்ளார்.