உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் மாற்றம் விவகாரம்: சுர்ஜேவாலா மவுனம் காப்பது ஏன்?

 முதல்வர் மாற்றம் விவகாரம்: சுர்ஜேவாலா மவுனம் காப்பது ஏன்?

- நமது நிருபர் - கர்நாடக காங்கிரஸ் அரசில், பதவி பகிர்வு, முதல்வர் மாற்றம் தொடர்பான விவாதங்கள், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டிய, காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு, இரண்டரை ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல்வர் பதவியை பெற, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார். ஆனால், பதவியை விட்டுத்தர முதல்வர் சித்தராமையா தயாராக இல்லை. இதன் விளைவாக, கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அஹிந்தா சமுதாயத்தினரின் ஆதரவை பெறும் நோக்கில், அஹிந்தா மாநாடு நடத்த முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். சர்ச்சை, பனிப்போர் மற்றொரு பக்கம் சிவகுமார், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும், முதல்வர் பதவி குறித்து பேசி, சர்ச்சைக்கு காரணமாகின்றனர். முதல்வர், துணை முதல்வர் இடையே பனிப்போர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் சர்ச்சை பேச்சுக்கள் என, காங்கிரஸ் குழப்பத்தில் சிக்கியுள்ளது. இவ்வளவு நடந்தும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மவுனமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த, 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, கர்நாடகாவுக்கு வந்த சுர்ஜேவாலா, தேர்தல் திட்டம் வகுத்து கொடுத்தார். காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததில், முக்கிய பங்கு வகித்தார். அதேநேரத் தில், 2018 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்., பொறுப்பாளராக இருந்த வேணுகோபால், ஊடகத்தினர் முன்னிலையில், 'கட்சியை ஆட்சியில் அமர்த்தாவிட்டால், நான் மீண்டும் கர்நாடக மக்களிடம் முகத்தை காட்ட மாட்டேன்' என்று சவால் விடுத்திருந்தார். ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றது; வேணுகோபாலும் மாற்றப்பட்டார். அவரை தொடர்ந்து, கர்நாடக பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பல திட்டங்களை வகுத்து, கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போது, மாநிலத்துக்கு வந்து சூழ்நிலையை சரியாக்கினார். வராதது ஏன்? ஆனால், கட்சியில் முதல்வர் பதவிக்காக, தொடர்ந்து குழப்பம் நிலவும் நிலையிலும், சுர்ஜேவாலா மாநிலத்துக்கு வரவில்லை. முந்தைய பொறுப்பாளர் வேணுகோபால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். முதல்வர் பதவி விஷயத்தில் ராகுல், சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார். சுர்ஜேவாலா தனி நபரை விட, கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். கட்சியின் நலனை மனதில் கொண்டு, முடிவுகள் எடுப்பார். இதை தொண்டர்கள் வரவேற்றனர். ஆனால் வேணுகோபால், கட்சியை விட தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்ற கருத்து கட்சியில் உள்ளது. அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் பலரும், டில்லிக்கு செல்லும் போது, வேணுகோபாலை சந்தித்து விட்டு திரும்புவர். சுர்ஜேவாலா யாரையும் சந்திக்கவில்லை. சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. கட்சி குழப்பத்தை சரி செய்ய, சுர்ஜாவாலா வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி மேலிட அளவில், ஏற்கனவே செய்து கொண்டதாக கூறப்படும் ஒப்பந்தப்படி, சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என்பது, சுர்ஜேவாலாவின் விருப்பம். ஆனால், ராகுல் மற்றும் வேணுகோபாலுக்கு, அதில் உடன்பாடு இல்லை. ஒப்பந்தப்படி நடக்கவில்லை என்பதா ல், சுர்ஜேவாலா வருத்தத்தில் உள்ளார். இதனால் தான், அனைத்து விஷயங்களில் ஒதுங்கி இருக்கிறாரா என, தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை