உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேர்தல் விதிமீறல்களில் கை தேர்ந்தது காங்கிரஸ்

தேர்தல் விதிமீறல்களில் கை தேர்ந்தது காங்கிரஸ்

பெங்களூரு : 'ஓட்டுகளை திருடியதாக குற்றஞ்சாட்டி, போராட்டம் நடத்த முற்பட்ட காங்கிரசும், ஓட்டுகளை திருடியுள்ளது' என, பெங்களூரு மாநகராட்சியின் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, துணை முதல்வர் சிவகுமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: பத்மநாபநகர் தொகுதி வாக்காளர் பட்டியலில், தமிழகம், தேன்கனி கோட்டையில் வசிக்கும், 9,000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பெயர்களை சேர்க்க முயற்சி நடந்தது. கே.ஆர்.புரம், மஹாதேவபுரா வாக்காளர் பட்டியலில் இருந்து 4,000 வங்கதேசத்தினர் பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியது. கடந்த 2023 தேர்தலின்போது, சிக்பேட், சாம்ராஜ்பேட் வாக்காளர் பட்டியலில் தமிழகம், ஆந்திராவின் சிறுபான்மையினர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதுபோன்று, குறுக்கு வழியில் வெற்றி பெறும் நோக்கில், வாக்காளர் பட்டியலில் வேறு மாநிலங்களின் சிறுபான்மையினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்தே, காங்கிரஸ் இதே வழியை பின்பற்றுகிறது. ஹிந்து வாக்காளர்கள், காங்கிரசை விட்டு விலகுவதால், காங்கிரஸ் தலைவர்கள், அக்கம், பக்கத்து மாநிலங்களின் சிறுபான்மை வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தது உறுதியாகியுள்ளது. தேர்தல் விதிமீறல்களில், சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பிரசித்தி பெற்ற காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் முறைகேடு குறித்து குரல் எழுப்புவது நகைப்புக்குரியது. இதை நீங்கள் (சிவகுமார்) மறக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை