உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது

 ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது

தாவணகெரே: அரசியல் முன்விரோதத்தில் ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் காங்கிரஸ் பெண் தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தாவணகெரே மாவட்டம், மாயகொண்டாவில் கடந்த, 10ம் தேதி திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். இந்நேரத்தில் கூட்டத்திற்குள் புகுந்த ஒருவர், ம.ஜ.த., பிரமுகர் அஸ்கர், 45, என்பவரின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். உயிருக்கு போராடிய அஸ்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. அஸ்கரின் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, மாயகொண்டா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் மாயகொண்டாவை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் காலித், 35, கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். அரசியல் முன்விரோதம் காரணமாக, மாயகொண்டா காங்கிரஸ் பெண் தொண்டர் சவிதா பாய் மல்லேஷ் கூறியதால், அஸ்கரை கத்தியால் குத்தியதாக காலித் வாக்குமூலம் அளித்தார். தலைமறைவாக இருந்த சவிதாபாயை, போலீசார் தேடினர். நேற்று முன்தினம் இரவு தாவணகெரேயின் ஆசாத் நகரில் அவர் கைது செய்யப்பட்டார். மாடலான சவிதாபாய், 2023 தேர்தலில் மாயகொண்டா தொகுதியில், காங்கிரஸ் சீட் பெற முயற்சித்தார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. தேர்தலில் பசவந்தப்பா என்பவருக்கு சீட் கிடைத்தது. அவர் வெற்றி பெற்று, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தன் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது பசவந்தப்பா தான் என்று, சவிதா பாய் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை