உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் மானநஷ்ட வழக்கு: பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் இன்று ஆஜர்

பா.ஜ.,வின் மானநஷ்ட வழக்கு: பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் இன்று ஆஜர்

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு எதிராக பொய்யான விளம்பரம் கொடுத்த வழக்கு தொடர்பாக, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், இன்று ஆஜராகிறார்.கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது '40 சதவீத கமிஷன்' அரசு, 'பேசிஎம்' என, குற்றம் சாட்டி சுவர்களில் காங்கிரசார், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டினர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சித்தராமையா, சிவகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர்.இதுமட்டுமின்றி 2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர். இதனால் பா.ஜ., தர்ம சங்கடத்துக்கு ஆளானது. தலைவர்கள் கொதிப்படைந்தனர். கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, விளம்பரம் வெளியிட்டது குறித்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடக பா.ஜ., முதன்மை செயலர் கேசவ பிரசாத், 2023 மே 8ல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், நடப்பாண்டு மார்ச் 11ல் ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு 'சம்மன்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. லோக்சபா தேர்தல் நடப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஜூன் வரை கால அவகாசம் அளிக்கும்படி, மூவரும் தங்கள் வக்கீல் மூலம், நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். நீதிமன்றமும் ஜூன் 1ல், ஆஜராகுமாறு உத்தரவிட்டது. சித்தராமையாவும், சிவகுமாரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று கொண்டனர்.ஆனால், ராகுல் ஆஜராகவில்லை. ஜூன் 7ல் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டது. இதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராகிறார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ., தொடுத்த மானநஷ்ட வழக்கில், முதலாவதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டி, இரண்டாவதாக சிவகுமார், மூன்றாவதாக சித்தராமையா, நான்காவதாக ராகுல் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Syed ghouse basha
ஜூன் 07, 2024 18:15

வழக்கு தொடுத்தவர்கள் மீது வழக்கு தொடரும் காலம் வெகு தொலைவில் இல்லை


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 06:25

கேடித்தனம் செய்வதில் காங்கிரஸ் கட்சியினர் நிபுணர்கள். ஒரு லட்சம் கொடுப்போம், மாதம் 8500ம் கொடுப்போம் என்று உபியில் கேரண்டி கார்டு கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். அனைவரும் நீதிமன்றம் சென்றால் ஒரு வேலை தீர்வு கிடைக்கும்.


A Viswanathan
ஜூன் 07, 2024 09:51

ராகுல் இனி என்ன என்ன சித்து வேலை செய்து மேலும் மக்களை முட்டாளாக்க முயல்கிறாரோ. இந்துக்கள் விழித்துக் கொண்டால் மட்டுமே இவர்களை கூண்டோடு அகற்ற முடியும்.இல்லை என்றால் கடவுளாலும் பாரதத்தை காப்பாற்ற முடியாது.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை