உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டிஜிட்டல் கைது மிரட்டல் பெஸ்காம் ஊழியர் தற்கொலை

டிஜிட்டல் கைது மிரட்டல் பெஸ்காம் ஊழியர் தற்கொலை

பெங்களூரு தெற்கு: டிஜிட்டல் கைது மிரட்டலால் 11 லட்சம் ரூபாய் இழந்த, 'பெஸ்காம்' ஒப்பந்த ஊழியர், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு தெற்கு சென்னப்பட்டணாவின் கெலகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமார், 42. பெங்களூரு, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள, 'பெஸ்காம்' அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர்.அந்த கடிதத்தில், 'விக்ரம் கோஸ்வாமி என்ற நபர் சி.பி.ஐ., அதிகாரி என்று கூறி, என்னிடம் மொபைல் போனில் பேசினார்.'என் மொபைல் நம்பர் சட்டவிரோத சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், என்னை 'டிஜிட்டல்' கைது செய்ய உள்ளதாகவும் கூறினார். 'என் வங்கிக் கணக்கில் உள்ள 11 லட்சம் ரூபாயை, விக்ரம் கூறிய, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தேன்.'விசாரணைக்கு பின், பணத்தை திருப்பித் தருவதாக கூறினார். ஆனால் தரவில்லை. 'மேற்கொண்டு 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இதுகுறித்து குமார் குடும்பத்தினர் அளித்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூலை 17, 2025 07:09

நீ குற்றவாளின்னு ஒருத்தன் சொன்னா உடனே இவங்களும் அத நம்பி பண பரிமாற்றம் செய்றாங்கன்னா.. இவங்க மேல இவங்களுக்கே நம்பிக்கை இல்லையா இல்லன்னா குற்றம் செஞ்சிகிட்டு இருந்தவங்கள இப்படி மாட்டி விடறாங்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை