உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரின் 5 மாநகராட்சிக்கு டிசம்பருக்குள் தேர்தல் நடக்கும்

பெங்களூரின் 5 மாநகராட்சிக்கு டிசம்பருக்குள் தேர்தல் நடக்கும்

பெங்களூரு : “ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, ஐந்து மாநகராட்சிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, ஐந்து மாநகராட்சிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இதுதொடர்பாக அடுத்த நான்கு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தலுக்கு தயாராகும் பணிகளை இப்போது இருந்தே துவங்க வேண்டும் என்று, கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கட்சியின் சித்தாந்தம் குறித்து பிரசாரம் செய்ய, தொண்டர்களை ஈடுபடுத்த வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர் ராகுல், எனக்கு உத்தரவிட்டுள்ளார். புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில் அனைவரும் தங்கள் விபரங்களை சரியாக கூ ற வேண்டும். ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கூட விபரம் பதிவு செய்யலாம். அனைத்து சமூகங்களுக்கும் நீதி வழங்குவது எங்கள் அடிப்படை நோக்கம். தெலுங்கானா மாதிரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல் அறிவுறுத்தி உள்ளார். இதற்காக ஒரு குழு விரைவில் தெலுங்கானா செல்லும். இவ்வாறு அவர் கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை