உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்

 மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்

தங்கவயல்: கோரமண்டல் பகுதியில் உள்ள சவுத் டாங்க் பிளாக்கில், சிவகுமார் என்பவர் வீட்டில், மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. நேற்று காலை 10:30 மணிக்கு சிவகுமார் வீட்டில், மின் மீட்டர் பகுதியில் திடீரென புகை வந்துள்ளது. உடன் வீட்டில் இருந்த அனைவரும் பயந்து வெளியேறினர். சில நிமிடங்களில் தீ பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். டாங்க் வார்டு முன்னாள் கவுன்சிலர் வேணி பாண்டியன், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வாகனத்தில் வந்தது. தீயை போராடி அணைத்தனர் . தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானதை பார்த்தார். மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி, நிவாரண உதவி செய்வதாக உறுதி அளித் தார். வேணி பாண்டியன் கூறுகையில், ''டாங்க் வார்டில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அரசு நிவாரண உதவி கிடைப்பதே இல்லை. டாங்க் வார்டு சுமிங்பாத் லைன் பகுதியில் மரம் விழுந்ததால், வீடு சேதம் அடைந்தது. அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்படவில்லை. ''சவுத் டாங்க் பிளாக் பகுதியில் மூடப்பட்ட பழைய சுரங்க பள்ளத்தில் வீடு இறங்கியது. அப்போதும், வீட்டுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மின்கசிவு ஏற்பட்டுள்ள வீட்டுக்காவது மனித நேய அடிப்படையில் நிவாரண நிதி வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ