உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மக்கள் நலன் காக்க தவறிய காங்., அரசு பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஆவேசம்

 மக்கள் நலன் காக்க தவறிய காங்., அரசு பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஆவேசம்

சித்ரதுர்கா: ''முதல்வர், துணை முதல்வர் இடையேயான அதிகார போட்டியால், மக்கள் நலனை பாதுகாக்க, மாநில அரசு தவறி விட்டது. விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறினார். மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, சித்ரதுர்காவில் பா.ஜ., வேளாண் மோர்ச்சாவினர் நடத்திய போராட்டத்தில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே அதிகார போட்டி நிலவுகிறது. மக்களின் பிரச்னைகளை கேட்க யாருமில்லை. மக்களின் பிரச்னையை தீர்ப்பதை விட, அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதையே ஆட்சியாளர்கள் முக்கியமாகக் கருதுகின்றனர். சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்து, கர்நாடக மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்னையை சந்தித்து வருகின்றனர். வறட்சியின் போது மாநில அரசு விழித்து கொள்ளவில்லை. கனமழையின் போதும் கவலைப்படவில்லை. கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இப்போது மக்காச்சோளம் விவசாயிகள் சிக்கலில் உள்ளனர். மாநில அரசு இன்னும் கொள்முதல் மையங்களை திறக்கவில்லை. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அனைத்திற்கும் மத்திய அரசை நோக்கியே கையை காட்டுகிறது. சித்தராமையாவும், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், அந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர்; இது, விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட நீதி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி