உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐ.பி.எஸ்., பெயரில் மோசடி 17 வயது சிறுவன் கைது

 ஐ.பி.எஸ்., பெயரில் மோசடி 17 வயது சிறுவன் கைது

ஹெப்பகோடி: ஐ.பி.எஸ்., அதிகாரி பெயரில் மோசடியில் ஈடுபட்ட, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மண்டல போலீஸ் டி.சி.பி.,யாக பணியாற்றுபவர் நாராயணா. ஐ.பி.எஸ்., அதிகாரியான இவரது புகைப்படத்தை, 'பேஸ்புக்' முகப்பு படமாக வைத்து, ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது. அதாவது, நாராயணா பேசுவது போல, நண்பர்களுக்கு செய்தி அனுப்பி பணம் பறித்தது. இதுபற்றி அறிந்த டி.சி.பி., கடந்த மாதம் ஹெப்பகோடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மாநிலம் கோடா குர்த் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை, கடந்த 1ம் தேதி கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்து, தேவனஹள்ளியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கைதான இந்த சிறுவன், நாடு முழுதும் பணியாற்றும் பிரபல ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புகைப்படத்தை பயன்படுத்தி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது தெரிந்தது. இந்த சிறுவனை பின்னால் இருந்து இயக்கிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை