உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் யூனிட்டி மால் கட்ட ஐகோர்ட் தடை

 மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் யூனிட்டி மால் கட்ட ஐகோர்ட் தடை

மைசூரு: மைசூரு நகரின் பொருட்காட்சி மையத்தின் வளாகத்தில், மத்திய அரசு செயல்படுத்தும், 'யூனிட்டி மால்' திட்டத்துக்கு, அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, தடை உத்தரவு பெற்றுள்ளார். மைசூரு நகரில் உள்ள, பொருட்காட்சி மையத்தின் வளாகத்தில், தனியார் மற்றும் அரசு ஒருங்கிணைப்பில், 'யூனிட்டி மால்' கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உள் நாட்டில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களுக்கு, மார்க்கெட் வசதி செய்து தருவது, திட்டத்தின் நோக்கமாகும். பொருட்காட்சி வளாகத்தின், 6.5 ஏக்கரில், 193 கோடி ரூபாய் செலவில், மால் கட்டி, நாட்டின் பல்வேறு 36 வர்த்தக கடைகள் திறக்க முடிவு செய்தது. கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு கடைகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களின் கைவினை பொருட்களை விற்பனை செய்ய, கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது, மத்திய அரசின் எண்ணமாகும். நடப்பாண்டு ஜூலை 27ல், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், யூனிட்டி மால் கட்ட அடிக்கல் நாட்டினார். பணிகளும் நடந்து வந்தன. ஆனால் பாரம்பரியமிக்க பொருட்காட்சி வளாகத்தில், வேறு கட்டடம் கட்ட அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அந்த இடத்தில் எந்த கட்டடமும் கூடாது என, நேற்று உத்தரவிட்டுள்ளது. மகன் துவக்கி வைத்த பணிகளுக்கு, தாய் தடை உத்தரவு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை