உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ஹோட்டல் அசோசியேஷன் திட்டம்

 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ஹோட்டல் அசோசியேஷன் திட்டம்

பெங்களூரு: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சோதனை நடத்திய பின், விழித்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள், தங்களின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். பெங்களூரின் ஸ்டார் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்த பல குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்தது. சமையல் அறைகள் துாய்மையாக இருக்கவில்லை. அது மட்டுமின்றி கெட்டுப்போன காய்கறிகள், அழுகிய இறைச்சி பயன்படுத்துவதும் தெரிந்தது. இத்தகைய ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் காதர், ஹோட்டல் அசோசியேஷனுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர், 'ஹோட்டல்களில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். துாய்மை, சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர். எனவே, தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி யளிக்க, பெங்களூரு ஹோட்டல் அசோசியேஷன் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 7, 8ம் தேதி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற் பட்ட ஹோட்டல்கள், பயிற்சிக்காக பதிவு செய்து கொண்டுள்ளன. இதில், ஹோட்டல் மானேஜர்கள், ஊழியர்கள் பங்கேற்பர். உணவு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை எப்படி பின்பற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை