உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆண் குழந்தைக்காக கணவர் டார்ச்சர் மனைவி துாக்கிட்டு தற்கொலை

ஆண் குழந்தைக்காக கணவர் டார்ச்சர் மனைவி துாக்கிட்டு தற்கொலை

மாதநாயகனஹள்ளி: ஆண் குழந்தை வேண்டும் என்று கணவர் 'டார்ச்சர்' செய்ததால், துாக்கில் தொங்கிய நிலையில் மனைவி பிணமாக மீட்கப்பட்டார். புகாரை அடுத்து, கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு, மாதநாயகனஹள்ளியின் பீமேஸ்வர் காலனியை சேர்ந்தவர் சிவனஞ்சப்பா, 40, ரேணுகா, 32, தம்பதி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டுமென சிவனஞ்சப்பா பிடிவாதம் செய்துள்ளார். இதுதொடர்பாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் இவ்விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரேணுகாவை சிவனஞ்சப்பா அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்றிரவு இருவரும் வெவ்வேறு அறையில் படுத்து உறங்கினர். விடிந்ததும், ரேணுகா தற்கொலை செய்து கொண்டதாக, அவரின் பெற்றோருக்கு, சிவனஞ்சப்பா தகவல் தெரிவித்தார். பதறியடித்து வந்த ரேணுகாவின் பெற்றோர், 'தங்கள் மகளை கொலை செய்து, துாக்கில் தொங்கவிட்டுள்ளார்' என, சிவனஞ்சப்பா மீது மாதநாயகனஹள்ளி போலீசில் புகார் செய்தனர். அங்கு வந்த போலீசார் ரேணுகாவின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவனஞ்சப்பாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை