உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / படிக்க முடியவில்லையே! அமைச்சர் ஜமீர் ஆதங்கம்

படிக்க முடியவில்லையே! அமைச்சர் ஜமீர் ஆதங்கம்

பெங்களூரு: ''நான் பத்தாம் வகுப்பிலே படிப்பை நிறுத்திவிட்டேன். தற்போது, படிக்க விரும்பினாலும், படிக்க முடியவில்லை,'' என, மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆதங்கப்பட்டார். பெங்களூரில் நேற்று முன் தினம் அவர் கூறியதாவது: நான் பத்தாம் வகுப்பிலே படிப்பை நிறுத்திவிட்டேன். தற்போது, படிக்க விரும்பினாலும், படிக்க முடியவில்லை. படிக்கவில்லை என்றாலும் அமைச்சர் ஆக உள்ளேன். ஆனால், எல்லோருக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது. எனவே, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். சி றுபான்மையினர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளில், 2023ல் 1.20 லட்சம் மாணவர்கள் தங்கி இருந்தனர். நடப்பாண்டில் 2.08 லட்சம் மாணவர்கள் தங்கி உள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் மாணவர்கள் தங்கி படிக்க வேண்டும் என இலக்கு நிர் ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ