மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
2 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
3 minutes ago
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று கிருத கம்பளம் பூஜை
4 minutes ago
-நமது நிருபர்-: திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து மேல்மருவத்துாருக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற கர்நாடக அரசு பஸ், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த சாலையூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்புறமுள்ள வலது பக்க டயர் வெடித்து நிலை தடுமாறியது. அந்த சமயத்தில், கீழ்பென்னாத்துாரிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி எதிரே வந்த பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி தீபன், 29, ஓட்டி வந்த டி.வி.எஸ்., பைக் மீது பஸ் மோதியது. இதில், தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago