உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் நீதிமன்றத்தில் செப்., 13ல் லோக் அதாலத்

தங்கவயல் நீதிமன்றத்தில் செப்., 13ல் லோக் அதாலத்

தங்கவயல் : ''தங்கவயல் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத், செப்டம்பர் 13ல் நடக்கிறது,'' என்று மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமார் தெரிவித்தார். தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தங்கவயல் நீதிமன்றத்தில் செப்டம்பர் 13ல் லோக் அதாலத் நடக்கிறது. இதுவரை நடந்த தேசிய லோக் அதாலத்தில் கோலார் மாவட்டத்தில் அதிகளவு தீர்வு கண்டதில் தங்கவயல் தாலுகா தான் முதல் இடத்தில் உள்ளது. வழக்குகள் தேக்கமாவதை தவிர்த்து, வழக்கின் இரு தரப்பினரையும் சமரசம் செய்து தீர்வு காண வைப்பதே முக்கிய நோக்கமாகும். விவாகரத்து, குடும்ப வழக்குகள், வங்கி, நிதி தகராறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். நீதிபதிகள் ஜெயலட்சுமி, சமீதா, வினோத் குமார், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை