மேலும் செய்திகள்
'இ -பட்டா' முகாமில் பொதுமக்கள் ஆர்வம்
30-Jun-2025
பெங்களூரு: போலி ஆவணம் தயாரித்து அரசு நிலத்தை விற்றதாக எழுந்த புகாரை அடுத்து, வீட்டுவசதி வாரிய உதவி இன்ஜினியர் வீட்டில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரு, எலஹங்கா மண்டல வீட்டுவசதி வாரிய அலுவலக உதவி இன்ஜினியர் சையது அஸ்கர், அலுவலக ஊழியர் கோவிந்தய்யா ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து எலஹங்கா நியூ டவுனில் உள்ள அரசு நிலத்தை, தனியாருக்கு 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என, லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் சந்திரசேகர் கடந்த 6ம் தேதி புகார் அளித்தார்.நிலம் விற்கப்பட்டதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் சையது அஸ்கர், கோவிந்தய்யா மீது வழக்குப் பதிவானது.நேற்று காலை ஆர்.டி.நகரில் உள்ள சையது அஸ்கர் வீடு, எலஹங்காவில் உள்ள கோவிந்தய்யா வீட்டில், லோக் ஆயுக்தா போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் கொடுத்துள்ளனர்.
30-Jun-2025