உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

 பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

அன்னபூர்னேஸ்வரிநகர்: மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை, மொபைல் போனில் வீடியோ எடுத்த, லேப் டெக்னீஷியன் கைது செய்யப்பட்டார். நாகரபாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு ஓய்வு அறையில் உடை மாற்றிக் கொண்டு இருந்தார். இதை ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பினார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்யும் சுவேந்து மொஹந்தி, 33 என்பவர், வீடியோ எடுத்தது தெரிய வந்தது. அவரது மொபைல் போனில், மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பெண் ஊழியர்கள் உடை மாற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது. அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார், சுவேந்து மொஹந்தியை கைது செ ய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ