மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு கைதானவருக்கு '10 ஆண்டு'
01-Aug-2025
ஹாவேரி: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், போலீசாரை திட்டிய நபருக்கு நீதிமன்றம், 17,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஹாவேரி நகரின், சாலை ஒன்றில் போக்குவரத்து போலீசார், நேற்று முன் தினம், போக்குவரத்து போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவனகவுடா பாட்டீல் என்பவர் பைக்கில் அதிவேகமாக வந்தார். இதை பார்த்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் விசாரித்த போது, வாகன ஆவணங்கள் இல்லாதது தெரிந்தது. இது குறித்து கேட்ட போலீசாரை, அவர் திட்டினார். இதனால் அவர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்த போலீசார், அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, ஹாவேரி ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு 17,000 ரூபாய் அபராதம் விதித்தும், போலீசாரை மரியாதை குறைவாக பேசியது தவறு, விதிமுறைகளை மீறக்கூடாது என அறிவுறுத்தியது.
01-Aug-2025