உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவாஜி முஸ்லிம்களின் எதிரியல்ல; அமைச்சர் சந்தோஷ் லாட் விளக்கம்

சிவாஜி முஸ்லிம்களின் எதிரியல்ல; அமைச்சர் சந்தோஷ் லாட் விளக்கம்

பெலகாவி: ''சத்ரபதி சிவாஜியை யாரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என அழைக்கக்கூடாது,'' என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்து உள்ளார். பெலகாவி மாவட்டம், அதானியில் நேற்று சத்ரபதி சிவாஜியின் சிலை திறப்பு விழா நடந்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பேசியதாவது:

நான் மராத்தா சமூகத்தை சேர்ந்தவன். சத்ரபதி சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவர் என யாரும் அழைக்கக்கூடாது. வரலாறு திரித்து கற்பிக்கப்படுகிறது. வரலாற்றை பற்றி பேசும் போது யாரும் தவறாக கூறக்கூடாது. தங்கள் இஷ்டத்திற்கு விருப்பு, வெறுப்புகளை கலந்து விடக்கூடாது. சிவாஜி முகலாயர்களை எதிர்த்தார்; முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. சிவாஜியை பற்றி பேசும் போது, அனைவரும் மரியாதையுடன் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசியதாவது: தேசத்தின் சிறந்த மனிதர்களில் ஒருவர் சிவாஜி. பெலகாவியில் உள்ளவர்கள் மராத்தி மொழியை எதிர்க்கிறீர்கள். ஆனால், உருது மொழியை எதிர்ப்பதில்லை. உங்களுக்கு உண்மையிலே திராணி இருந்தால், உருது மொழியில் எழுதப்பட்ட கடைகளின் பெயர் பலகைகளை அகற்றுங்கள். சிவாஜி இல்லையென்றால் நானும் முஸ்லிமாக மாறியிருப்பேன். என் பெயர் எத்னால் என இல்லாமல் பஷீர் என ஆகியிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை