உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு

 காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு

பெங்களூரு: ''சந்தன கடத்தல் வீரப்பன் காலத்தை விட, இன்றைய முதல்வர் சித்தராமையா ஆட்சி காலத்தில் தான், யானைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டினார் பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலத்தில் யானைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன், 25 ஆண்டுகளில், 500 யானைகளை கொன்றிருப்பார். ஆனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த, இரண்டரை ஆண்டுகளில் 206 யானைகள் இறந்துள்ளன. யானைகள் மட்டுமின்றி, சிறுத்தை, மயில் உட்பட, வன விலங்குகளை பாதுகாக்க, அரசு அக்கறை காட்டவில்லை. கர்நாடகாவில் வன விலங்குகள் சபாரி, சுற்றுலாத்துறையின் பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. யானைகள் இறப்பை கட்டுப்படுத்த, சபாரியை நிறுத்துவது மட்டுமே தீர்வா. இதை பற்றி வல்லுநர்களிடம், அரசு அறிக்கை பெற்றதா. ரிசார்ட் உரிமையாளர்களுடன் கமிஷன் டீல் பேச, இது போன்று நாடகமாடுகின்றனரா? நகர்ப்பகுதிகளில் பாம்புகள் வளர்ப்பது, விற்பது தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பக்கம் விதிமீறலாக இயங்கும் ரிசார்ட்டுகளின் மீது, கடுமையான நடவடிக்கை எடுப்பதை போன்று, காட்டி கொள்கிறது. மற்றொரு பக்கம் சட்டவிரோத செயல்கள் நடந்தும், கண் மூடி அமர்ந்திருக்கிறது. இதற்கு முன் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சபாரிக்கு சென்றதில்லையா. இப்போது ஏன் தடை விதிக்கின்றனர். என் பெயரில் எந்த ரிசார்ட்டும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்களின் பெயரில், பல ரிசார்ட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை