உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  துங்கபத்ரா ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட தாய், மகள்

 துங்கபத்ரா ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட தாய், மகள்

விஜயநகரா: ஹம்பிக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த தாயும், மகளும் துங்கபத்ரா ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆந்திரா மாநிலம், கர்னுால் மாவட்டத்தின், சூளகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஷாஹீன், 38. இவரது மகள் யாஸ்மின், 13. தாயும், மகளும் தங்கள் உறவினர்களுடன், விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஹம்பியின் துங்கபத்ரா ஆற்றங்கரையில், நேற்று காலை உறவினர்களுடன் சேர்ந்து சமைத்தனர். அதன் பின் தாயும், மகளும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது கால் தவறி, நீரில் விழுந்த இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, ஹம்பி போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், தாய், மகளை தேடுகின்றனர்.சம்பவம் குறித்து. வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை