உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேசிய நீச்சல் வீரர் மாரடைப்பில் பலி

தேசிய நீச்சல் வீரர் மாரடைப்பில் பலி

மங்களூரு : நீரில் நீச்சலடிக்கும் போதே, தேசிய நீச்சல் வீரர், மாரடைப்பால் உயிரிழந்தார். தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரின், குத்ரோலியில் வசித்தவர் சந்திரசேகர் ராய், 52. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தேசிய அளவிலான நீச்சல் வீரர். மூச்சை அடக்கி நீருக்குள் நீச்சலடிப்பதில் கைதேர்ந்தவர். தன் சாதனையால் இரண்டு முறை, இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு முறை உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மங்களூரு வந்து, மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீச்சல் குளத்தில், பொது மக்களுக்கு அனுமதி இல்லை. நீச்சல் குளத்தின் நிர்வகிப்புக்காக, சந்திரசேகர் வந்திருந்தார். சிறிது நேரம் நீச்சலடிப்பதற்காக சென்றார். நீருக்குள் மூழ்கி நீச்சலடித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை