உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பக்கத்து வீட்டினர் கிண்டல்; வாலிபர் தற்கொலை 

 பக்கத்து வீட்டினர் கிண்டல்; வாலிபர் தற்கொலை 

மைசூரு: பக்கத்து வீட்டினர் கிண்டல் செய்ததால், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மைசூரின் நஞ்சன்கூடு சிங்காரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40. விவசாயி. இவரது மாடுகளை பக்கத்து வீட்டின், வாசல்படி கதவில் கட்டியதால், சங்கருக்கும், பக்கத்து வீட்டின் மாதே கவுடாவுக்கும், நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. சங்கர் தாக்கப்பட்டார். இதுபற்றி பக்கத்து வீட்டினரிடம் கேட்டும் சங்கரின் மகன் நாகேந்திரா சண்டை போடவில்லை. பக்கத்து வீடுகளில் வசிக்கும் மஹாதேவா, சிவமூர்த்தி, கிருஷ்ணா, சங்கரா, மனோஜ் உட்பட 8 பேர், நாகேந்திராவிடம் சென்று, 'உன் அப்பாவை அடித்து உள்ளனர். இதை தட்டிக் கேட்க மாட்டாயா; நீ வாழ்வதை விட சாவது மேல்' என்று கூறி கிண்டல் செய்துள்ளனர். மனம் உடைந்த நாகேந்திரா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதேகவுடா உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை