உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

ஆந்திர மாணவர் சிக்கபல்லாபூரில் தற்கொலை சிக்கபல்லாபூர்: ஆந்திராவின், ஹிந்தப்பூரை சேர்ந்தவர் சாயி தருண் ரெட்டி, 21. இவர் சிக்கபல்லாபூர் நகரில் உள்ள, தனியார் கல்லுாரியில், இறுதியாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். கங்கம்மாகுடி சாலையில் உள்ள விடுதியில், வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் அறையில் தங்கியிருந்த மாணவர் சந்தேகத்தில் பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ராமலிங்க ரெட்டி எச்சரிக்கை பெங்களூரு: கழிவு நீரை சரியாக சுத்திகரிக்காமல், ஆற்றில் பாய விடுவது தொடர்பாக, பெங்களூரு குடிநீர் வாரியம் உட்பட, நகர மேம்பாட்டு வாரியங்கள் மீது, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிருப்தி தெரிவித்தார். கர்நாடக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்திய போது, இவ்வாறு கூறினார். போதைப்பொருள் விற்றவருக்கு 10 ஆண்டு சிறை பெங்களூரு: பெங்களூரின், பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜில், 2021 ஆகஸ்ட் 19ம் தேதியன்று, போதைப்பொருள் விற்றதாகபகீரத், 44, என்பவரை கிரிநகர் போலீசார் கைது செய்தனர். சி.சி.ஹெச்., 35வது நீதிமன்றத்தில் பகீரத்தின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி