உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சித்ரதுர்கா விபத்தில் காயமடைந்த ஆம்னி பஸ் டிரைவர் மரணம்

 சித்ரதுர்கா விபத்தில் காயமடைந்த ஆம்னி பஸ் டிரைவர் மரணம்

சித்ரதுர்கா: சித்ரதுர்கா அருகே நேற்று முன்தினம் நடந்த கோர விபத்தில், தீக்காயம் அடைந்த ஆம்னி பஸ் டிரைவர் நேற்று இறந்தார். பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்து உள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா கோர்லத்து கிராஸ் ஜவன்கொண்டனஹள்ளி கிராம பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு, பெங்களூரில் இருந்து கோகர்ணா நோக்கி சென்ற, 'சீபேர்ட்' ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிந்தன. இந்த கோர விபத்தில், லாரி டிரைவர் குல்தீப், பஸ்சில் பயணம் செய்த பெங்களூரின் பிந்து, 28, இவரது மகள் கிரேயா, 6, ஹாசன் சென்னராயப்பட்டணாவின் மானசா, 26, நவ்யா, 26, உத்தர கன்னடா பட்கல்லின் ராஷ்மி, 27 ஆகிய ஆறு பேர் இறந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் முகமது ரபீக், 35, கிளீனர் சாதிக் உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சித்ரதுர்காவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முகமது ரபீக், உடல்நிலை தேறினார். விபத்து குறித்து ஊடகத்தினருக்கு பேட்டி அளித்தார். ஆனால், நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார். இதன்மூலம் கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்து உள்ளது. முகமது ரபீக், ஹாவேரி மாவட்டம் ஷிகாவியை சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி