உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போட்டோஷூட் நடத்த லால்பாக் பூங்காவில் தடை

 போட்டோஷூட் நடத்த லால்பாக் பூங்காவில் தடை

பெங்களூரு: தாவரங்களை பாதுகாக்கும் முயற்சியாக லால்பாக் பூங்காவில் 'போட்டோஷூட்' நடத்த, அரசு தடை விதித்துள்ளது. பெங்களூரில் லால்பாக் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக, திருமணத்திற்கு முந்தைய 'போட்டோஷூட்', ரீல்ஸ்' வீடியோக்கள் எடுக்கின்றனர். அப்போது தாவரங்கள் சேதப்படுத்தப்படுவதாக தோட்டக்கலைத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, 'லால்பாக்கில் காலை 5:30 மணி முதல் 9:00 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் நடைப்பயிற்சி அனுமதிக்கப்படும். சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 'பூங்காவில் வெளியாட்கள் மரங்கள் நடவும் அனுமதி இல்லை. போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ எடுக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை