உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரில் சிறப்பு சட்டசபை கூட்டம் செப்., 21 முதல் 3 நாட்கள் நடத்த முடிவு

 பெங்களூரில் சிறப்பு சட்டசபை கூட்டம் செப்., 21 முதல் 3 நாட்கள் நடத்த முடிவு

பெங்களூரு: மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான, கஸ்துாரி ரங்கன் அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்க, இம்மாதம் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள், பெங்களூரில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சரைவை கூட்டம் நடந்தது. இங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்த பேட்டி: கடந்த மாதம் 13 ம் தேதி முதல் 25ம் தேதி வரை, கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. வறட்சி பிரச்னை உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து இருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் விவாதிக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது 150 ஆண்டுகளில் இல்லாதது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டி உள்ளது. வெளியுறவு துறை அதுபோல மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்துாரி ரங்கன் அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டு ஆட்சேபனை கேட்டுள்ளது. இதுபற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டி இருப்பதால், இம்மாதம் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள், பெங்களூரு விதான் சவுதாவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீடு மற்றும் வெளியுறவு என்ற பெயரில் புதிய துறையை நிறுவவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த துறை வெளிநாட்டு வாழ் கன்னடர்களுக்கு உதவவும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோருக்கும் உதவும் வகையில் செயல்படும். இந்த துறையுடன் இணைந்து ஒரு மன்றமும் அமைக்கப்படும். இதன் தலைவராக முதல்வர் இருப்பார். துணை தலைவராக துணை முதல்வர் இருப்பார். தொழில், விவசாயம், தோட்டகலை, தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற வளர்ச்சி, பெங்களூரு வளர்ச்சி, உயர்கல்வி, மின்சாரம், சுகாதாரம், விளையாட்டு, மருத்துவ கல்வி துறைகளின் அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர். 4,500 மின்சார பஸ்கள் பி.எம்., இ டிரைவ் திட்டத்தின் கீழ் கர்நாடகாவுக்கு 4,500 மின்சார பஸ்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான டெண்டர்களை ஆறு நி றுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் மாநிலத்திற்கு புதிய பஸ்கள் வரவுள்ளன. பல்லாரி மாநகராட்சி எல்லைக்குள் வால்மீகி சிலை அமைக்கப்பட உள்ளது. கவர்னர் அலுவலக டாக்டர் நவீன்குமாரின் பணி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் தீவன தொகுப்புக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சி.வி.ராமன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள், சி.டி., ஸ்கேன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்களாக அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கவுடா, பிரியங்க் கார்கே, சந்தோஷ் லாட், காதர், ஈஸ்வர் கன்ட்ரே, பாலகிருஷ்ணா, லட்சுமண் சவதி ஆகியோர் நியமிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி