உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பும்படி தேஜஸ்வி கோரிக்கை

 சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பும்படி தேஜஸ்வி கோரிக்கை

பெங்களூரு: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பும்படி, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கோரிக்கை வைத்து உள்ளார். கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அரசு பூங்காக்களில் உள்ள, 5 சதவீத இடத்தை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என மசோதாவில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்குபெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: அரசு பூங்காக்கள் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது. இவை மக்களின் வாழ்வாதாரம், நகரை பாதுகாக்கும் பசுமை கவசம். பூங்காக்களை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. இதனால், தோட்டங்களின் நகரம் என்ற பெருமையை பெங்களூரு இழக்கும். இன்று, 5 சதவீதம் எடுக்கப்படும்; நாளை இது அதிகரிக்கும். பெங்களூரில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை திட்டத்துக்குலால்பாக் பூங்காவின் நிலம் தேவைப்பட்டது. இதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதற்காகவே, அரசு பூங்காக்களில், 5 சதவீத இடம் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் திருத்த மசோதா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. லால்பாக் பூங்காவிற்கு தீங்கு ஏற்படுத்தும் மசோதாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கையெழுத்திடக்கூடாது. இந்த மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டுகிறேன். மசோதா மீது மறுஆய்வு செய்ய வேண்டுகிறேன். என்ன நடந்தாலும் லாப்பாக் பூங்காவை பாதுகாக்கும் போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்