ரயிலில் ‘ஓசி’ பயணம் ரூ.16 லட்சம் அபராதம்
பெங்களூரு: ரயிலில் ஓசி பயணம் செய்தவர்களிடம் 16 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பல ரயில் நிலையங்களில், கடந்த 5ம் தேதி டிக்கெட் பரிசோதகர்கள் பயணியரிடம் டிக்கெட் சோதனை நடத்தினர். இதில் 1,302 பயணியர் டிக்கெட் எடுக்காமல், ரயிலில் ஓசி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 16.71 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணியர் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், இந்த சோதனை நடத்தப்பட்டதாக, தென்மேற்கு ரயில்வே கூறியுள்ளது.