உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டீசல் விலை உயர்வுக்கு 14 வரை அரசுக்கு கெடு; லாரி உரிமையாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை

டீசல் விலை உயர்வுக்கு 14 வரை அரசுக்கு கெடு; லாரி உரிமையாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை

பெங்களூரு: டீசல் விலை உயர்வை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வரும் 14ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.ஏற்கனவே பால் விலை, மின் கட்டணம், மெட்ரோ ரயில் கட்டணம் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் விலை உயர்வால் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் டீசல் மீதான விற்பனை வரியை இரண்டு ரூபாய் அதிகரித்து, மாநில அரசு உத்தரவு வெளியிட்டது. இதனால் லாரி உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.டீசல் விலை உயர்வை கண்டித்து, லாரி போக்குவரத்தை நிறுத்தி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகின்றனர். இதுதொடர்பாக, பெங்களூரின், சாம்ராஜ்பேட்டில் உள்ள தனியார் ஹோட்டலில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், நேற்று ஆலோசனை நடத்தினர்.வரும் 14 முதல், போராட்டத்தை துவக்க, லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, லாரி அசோசியேஷன் தலைவர் சண்முகப்பா அளித்த பேட்டி:கடந்த ஏழு மாதங்களில், டீசல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் லாரி உட்பட, வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எதை வேண்டுமானாலும் இலவசமாக வழங்கட்டும். ஆனால் லாரி உரிமையாளர்களின் வயிற்றில் அடித்து, டீசல் விலையை உயர்த்துவது சரியல்ல.டீசல் விலை உயர்வை கண்டித்தும், எங்களின் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.வரும் 14ம் தேதி வரை, அரசுக்கு அவகாசம் அளிப்போம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அன்று இரவில் இருந்தே, போராட்டத்தை துவக்குவோம் லாரிகள் உட்பட, ஒன்பது லட்சம் வர்த்தக வாகனங்கள் இயங்காது.கோரிக்கை நிறைவேறும் வரை, கர்நாடகாவுக்குள் யாரும் வரமாட்டோம். எங்களின் போராட்டத்துக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஆதரவளித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.விமான நிலைய டாக்சிகள், சரக்கு வாகனங்கள், பெட்ரோல், டீசல் லாரிகள், ஜல்லி கற்கள், மணல் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. லாரி ஓட்டுநர்கள் சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ