உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

புதுடில்லி: எச்.டி.எப்.சி., வங்கி, இரண்டு லட்சம் பணியாளர்கள் கொண்ட நாட்டின் எட்டாவது நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காகவும், பணிவிலகல் விகிதங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு தீவிரமாக ஏராளமானோரை பணியமர்த்தும் முயற்சியை மேற்கொண்டது. இதன் விளைவாக, கடந்த டிசம்பர் காலாண்டில், வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது. மேலும், வங்கியில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, நான்கரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டதாக ஏழு நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது எட்டாவதாக எச்.டி.எப்.சி., வங்கி இணைந்துள்ளது. இதுகுறித்து, எச்.டி.எப்.சி., வங்கி தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன் வைத்யநாதன் கூறியதாவது:கடந்த டிசம்பர் காலாண்டில், வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, 5.1 சதவீதம் அதாவது 10,167 பேர் அதிகரித்து, 2.08 லட்சமாக இருந்தது. செப்டம்பர் காலாண்டை தவிர்த்து, கடந்த ஒராண்டில், வங்கி அதன் அதிகபட்ச வளர்ச்சியை கண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி