| ADDED : ஜன 01, 2024 12:47 AM
தனிநபர் கடன், வாகன கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதும், தனிநபர் கடன் வசதி மருத்துவ செலவுகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்திய கடன் பரப்பு தொடர்பாக, நிதி தொழில் வளர்ச்சி கழகம் சேகரித்து வெளியிட்டுள்ள தரவுகள், டிசம்பர் வரையான காலாண்டில் அதிக கடன், வங்கிகள், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடன் வழங்கலில் நவீன தொழில்நுட்பம் தாக்கம் செலுத்துவதும் தெரிய வந்துள்ளது.வாகன கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்களை விட தனிநபர் கடன் அதிகம் நாடப்பட்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் தனிநபர் கடன் விகிதம், 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும், தனிநபர் கடனில் கணிசமான விகிதம் மருத்துவ செலவுகளுக்காக பெறப்பட்டுள்ளது எனும் தகவலும் தெரிய வந்துள்ளது.மருத்துவ பணவீக்கம் அதிகரித்து வருவது தொடர்பான கவலையையும் இந்த தகவல் கோடிட்டு காட்டுகிறது. வாகன கடன் மற்றும் கல்வி கடனும் அதிகரித்துள்ள நிலையில் தங்க நகை கடன், 30 சதவீதம் குறைவாக நாடப்பட்டுள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.