மேலும் செய்திகள்
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை
03-Dec-2025
டில்லியில் ஐ.சி.எல்., பின்கார்ப் புதிய கிளைகள்
29-Nov-2025
ரூ.34 லட்சம் கோடிக்கு முத்ரா திட்டத்தில் கடன்
27-Nov-2025 | 5
சென்னை: குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 4 லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, பிணை தேவையில்லை என தமிழக அரசின் புதிய சட்டம் தெரிவிக்கிறது. தமிழ்நாடு கடன் நிறுவனங்கள் அச்சுறுத்தும் நடவடிக்கை தடை சட்டம் 2025, கடந்த நவ., 19ல் நடைமுறைக்கு வந்துஉள்ளது. என்ன மாற்றம்? பதிவு செய்யப்பட்ட கடன் அளிக்கும் நிறுவனங்களிடம் 4 லட்ச ரூபாய் வரை கடன் பெறுவோர், இனி பிணை ஏதும் அளிக்க தேவையில்லை. சுயஉதவி குழுக்களின் பிணையற்ற கடன் பெறும் உச்சவரம்பு 10 லட்ச ரூபாயாக இருக்கும். முதல்முறை கடன் பெறுவோர், குறைந்த வருவாய் பிரிவினர், முறைசார்ந்த கடன் பெறுவதில் இருந்த தடைகளை குறைக்க இது வழி செய்யும். கடனாளிக்கு பலன் சிறுகடன் பெறுவோர், குறிப்பாக மகளிர் மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், சொத்து இல்லாதவர்கள் மற்றும் கடன் வரலாறு இல்லாத முதல்முறை கடன் பெறுவோருக்கு பிணை என்பது மிகப்பெரும் தடையாக உள்ளது. பிணையற்ற தனிநபர், தொழில் கடனை வங்கிகள் தர முன்வந்தாலும், கடன் வரலாறு, வருமான சான்று, முந்தைய வாடிக்கையாளராக இல்லாதது ஆகியவை, கடன் மறுக்க காரணமாகின்றன. புதிய விதிகளின் வாயிலாக இனி, தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களில் 4 லட்ச ரூபாய் வரை, பிணையின்றி கடன் பெற இயலும். இதனால், அமைப்புசாரா கடன் வழங்குவோரின் கடன் வசூலிப்பில் கடுமை, அதிக வட்டி விகிதம் ஆகியவற்றை நம்பியிருப்பது குறையும். கடன் பெறுவோருக்கு கடன் பெறுவது எளிதாக்கப்பட்டாலும், வட்டி, திருப்பி செலுத்தும் காலம், கூடுதல் கட்டணங்கள் ஆகியவை பற்றி பரிசீலித்து கடன் பெற வேண்டும். பிணையற்ற கடன் என்பதால், வட்டியை மிகக்குறைவாக எதிர்பார்க்க இயலாது. பிணை அடிப்படையில் வழங்கப்பட்ட பெரிய தொகை கடனுக்கு, கடைசி தவணை செலுத்தி முடிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பிணையை திருப்பித்தர வேண்டும் கடன் தரும் நிறுவனங்கள் அதற்கென உள்ள இணையதளத்தில், ஆண்டுதோறும் செப்., 30க்குள் அறிக்கையை பதிவேற்ற வேண்டும் வழங்கப்பட்ட கடன் தொடர்பான ஆவணங்களை குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்.
04-Dec-2025
03-Dec-2025
29-Nov-2025
27-Nov-2025 | 5