உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பவர் டூல்ஸ் தயாரிப்பில் இறங்கும் ஜோஹோ

பவர் டூல்ஸ் தயாரிப்பில் இறங்கும் ஜோஹோ

புதுடில்லி: 'கருவி' எனும் பிராண்டு வாயிலாக, தயாரிப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 'பவர் டூல்ஸ்' எனும் சக்தி வாய்ந்த கருவிகளை விரைவில் தயாரிக்க உள்ளதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:ஜோஹோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், ஒரு பெட்டி முழுக்க கருவிகளுடன், என்னை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தார். இக்கருவிகளை, ஜோஹோ தயாரிக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து, முதலில் எனக்கு தயக்கம் இருந்தாலும், இதன் வாயிலாக, கிராமப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பை பற்றி நான் யோசித்தேன். இதையடுத்து, இக்கருவிகளை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறை கண்டறிய, சிறிய பொறியியல் குழு ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தோம்.பல்வேறு வடிவமைப்பு திருத்தங்களுக்கு பின், தற்போது வணிக ரீதியாக இக்கருவிகளை தயாரிக்க ஆயத்தமாகி உள்ளோம். கருவிகளுக்கானது என்பதால், கருவி என்றே பிராண்டு பெயர் சூட்டியுள்ளோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V.Rajamohan
ஏப் 11, 2024 20:30

Super Vembu sir, our Best wishes????


Sekaran
ஏப் 11, 2024 14:53

சூப்பர் .வரவேற்க தக்கது.


jss
ஏப் 11, 2024 08:08

தமிழ் நாட்டில் உற்பத்தி செய்வதை திமுக ஆட்சியில் மறந்து விடுங்கள். லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து, இநாகரிகமான சங்கங்கள் உங்கள் உற்பத்தியை கடுமையாக பாதிக்கும். தமிழக இளைஞர்கள் புத்துசாலிகள், கடுமையான உழைப்பாளிகள் ஆனால் அவர்களை படி போதையிலும், போதைப்பொருட்களுக்கும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது திராவிட கட்சிகள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை