உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளன.இந்தியாவில் பயணியர் வாகன விற்பனை, கடந்த 2024ம் நிதியாண்டில் 42.30 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வாகன விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் மூலதன செலவுகளை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ள இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த முதலீடுகளை புதிய வாகன அறிமுகம், திறன் விரிவாக்கம், தொழில் நுட்ப மேம்பாடு போன்றவற்றுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

நிறுவனம் முதலீடு (ரூபாய் கோடியில்)

மாருதி 10,000ஹூண்டாய் 13,180டாடா 43,000மஹிந்திரா 27,000ஜெ.எஸ்.டபிள்யு., - -எம்.ஜி., மோட்டார் 5,000நிசான் - ரெனோ 5,300


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ