உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்வாகன துறையில் 2 லட்சம் திறன்மிகு பணியாளர் தேவை

மின்வாகன துறையில் 2 லட்சம் திறன்மிகு பணியாளர் தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2030க்குள், 30 சதவீத வாகனங்களை மின்வாகனங்களாக மாற்றுவதற்கு, வாகனத் துறையில் திறன் மிகுந்த இரண்டு லட்சம் பேர் தேவை என, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான 'சியாம்' தெரிவித்துள்ளது.மேலும், பணியாளர்களை பணியமர்த்துவதற்கும்; பயிற்சி வழங்குவதற்கும், மொத்தம் 13,552 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சியாம் தலைவர் வினோத் அகர்வால் கூறியதாவது:எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, வாகன துறை எதிர்கொள்ளும் முக்கியமான தடைகளில் ஒன்றாக இருப்பது, திறன் மிகுந்தவர்களின் பற்றாக்குறை தான்.எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற பல துறைகளிலும், திறன் மிகுந்தோர் தேவைப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.சியாம் அமைப்பின் மின்வாகன திறன் இடைவெளி ஆய்வறிக்கையின்படி, மின் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் 100 சதவீதத்தை எட்டுவதற்கு, 2030ம் ஆண்டு வரை இப்பிரிவில் ஆண்டுக்கு 30,000 திறன்மிகு பணியாளர்கள் தேவைப்படுவர்.மேலும் பணியமர்த்தல் செலவு 7,671 கோடி ரூபாயாகவும், பயிற்சிக்கான செலவு 5,881 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும்; மொத்தத்தில், திறனுக்கான முதலீடு 13,552 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற பல துறைகளிலும், திறன் மிகுந்தோர் தேவைப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ayyadurai
ஜூலை 17, 2024 20:13

குஜராத் மக்கள் அதிக அளவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்துள்ளனர் .அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங் காலேஜஸ் குஜராத் மற்றும் உத்தர பிரதேஷ்–ல் உள்ளது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை