உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 22ல் ஜி-.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

22ல் ஜி-.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், முதல் முறையாக கவுன்சில் கூட்டம், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்துள்ளது. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்ற இரண்டா வது நாளில், கவுன்சில் கூட்டம் குறித்த அறிவிப்பு, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின், முதல் முறையாக நடைபெற உள்ள இக்கூட்டம், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 53வது கூட்டமாகும். இக்கூட்டம் புதுடில்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 'ஆன்லைன் கேமிங்' நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை