உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றுமதி 30% அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றுமதி 30% அதிகரிப்பு

புதுடில்லி:சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான, இந்தியாவின் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி, கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜூலையில் மிக உயர்ந்த அளவாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலையில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுக்கான டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி, நாள் ஒன்றுக்கு 1.57 லட்சம் பீப்பாய்களில் இருந்து, 2.24 லட்சம் பீப்பாய்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக ஆதாரத்தின்படி, இது 2021 கடைசி மற்றும் 2022ம் ஆண்டு துவக்கத்தில் இருந்த அளவை காட்டிலும் அதிகமாகும். கடந்த ஜூனில் அனுப்பியதை காட்டிலும், 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை