உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்காவில் 60 சதவீத குழந்தை உணவுகளில் தரமில்லை

அமெரிக்காவில் 60 சதவீத குழந்தை உணவுகளில் தரமில்லை

அமெரிக்காவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் 60 சதவீதம், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்தை பூர்த்தி செய்யவில்லை என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த 'நியூட்ரியன்ட்ஸ்' இதழ், அந்நாட்டின் முன்னணி 10 பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் 651 குழந்தை உணவுகளை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆய்வுக்குள்ளான 651 உணவுகளில், பெரும்பாலானவை நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிய வந்த நிலையில், அவற்றின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 99 சதவீத பொருட்கள் தவறான சந்தை நடைமுறை வாயிலாக விளம்பரப்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொன்றும் சராசரியாக 4.7 தடை செய்யப்பட்ட வாக்குறுதிகளை அளிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்படாத, செயற்கை வண்ணம் மற்றும் சுவை சேர்க்கப்படாத, முற்றிலும் இயற்கையான என்பது உட்பட பல பொய்கள் விளம்பரத்தில் இடம்பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், குழந்தைகள் உடல் பருமன் அதிகரிப்பதில் இதுபோன்ற தரமற்ற உணவுப் பொருட்கள் பங்கு வகிப்பதாகவும், ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ