உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மீன் வளர்ப்பு தொழிலில் சிறந்த ஆலோசனை வழங்கிய இருவருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

மீன் வளர்ப்பு தொழிலில் சிறந்த ஆலோசனை வழங்கிய இருவருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப் டி.என்., அக்வாகனெக்ட், சத்யபாமா டெக்னாலஜி பிசினஸ் இன்கியூபேட்டர்' ஆகியவை இணைந்து, 'பிஷ் டேங்க்' என்ற பெயரில் கடல் உணவு பொருட்கள் வளர்ப்பு தொழிலில் சிறந்த ஆலோசனை வழங்கும் போட்டியை சமீபத்தில் நடத்தின.இதில், சிறந்த ஆலோசனை வழங்கும் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனத்துக்கும், மாணவருக்கும் பரிசு வழங்கப்பட இருந்தது. நாடு முழுதும் இருந்து, 217 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில், சென்னையைச் சேர்ந்த, 'யோதக்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் தர்மிக் பபோதரா மற்றும் நாகை மாவட்டம், மீன் வள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் கிறிஸ்பின் பினேஷ் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஸ்டார்ட் அப் டி.என்., அலுவலகத்தில், அதன் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை நேற்று முன்தினம் வழங்கினார். 'யோதக்' ஸ்டார்ட் அப் நிறுவனம், கடல் உணவு பொருட்களை, குளிர்பதன கட்டமைப்பு வசதி உள்ள வாகனத்தில், குறைந்த செலவில் எடுத்து செல்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்கிஉள்ளது. மாணவர் கிறிஸ்பின், மீன் செதில்களை நவீன முறையில், 'பெடல்' போன்ற கருவியால் அகற்றும் கருவியை உருவாக்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை