மேலும் செய்திகள்
கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது
1 hour(s) ago
துாத்துக்குடிக்கு வந்த 304 மீட்டர் நீள சரக்கு கப்பல்
1 hour(s) ago
ஒரு கிலோ காபி துாள் விலை ரூ.1,100
2 hour(s) ago
புதுடில்லி : 'மாருதி, டாடா, ஹூண்டாய்' போன்ற இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளர்கள், கடந்த 2024ம் நிதியாண்டு மற்றும் கடந்த மார்ச் மாதத்துக்கான விற்பனையில் நல்ல வளர்ச்சியை கண்டு உள்ளனர்.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் வரையான காலத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், மொத்தம் 21.35 லட்சம் வாகனங்களை, முகவர்களுக்கு வழங்கி உள்ளது. இது முந்தைய 2023ம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்டிருந்த 19.66 லட்சம் வாகனங்களை விட, 8.60 சதவீதம் உயர்வு.இதேபோல், கடந்த மாத விற்பனையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதியை தொடர்ந்து, ஹூண்டாய் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து டாடா, மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் கடந்த 2023ம் நிதியாண்டில் 38.9 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 9 சதவீதம் அதிகரித்து, 42.3 லட்சம் வாகனங்களாக இருந்தது.பயணியர் வாகன விற்பனைநிறுவனம் மார்ச் (2023 2024) 2022-23 2023-2024
ஹூண்டாய் 61,500 65,601 7,20,565 7,77,876 8 ஏற்றம்டாடா மோட்டார்ஸ் 44,225 50,297 5,41,087 5,73,495 6 ஏற்றம்மஹிந்திரா 35,997 40,631 3,59,253 4,59,877 28 ஏற்றம்டொயோட்டா 21,783 27,180 1,77,683 2,63,512 48 ஏற்றம்
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago