உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிமென்ட் நிறுவனங்களை அள்ளுகிறார் அதானி

சிமென்ட் நிறுவனங்களை அள்ளுகிறார் அதானி

புதுடில்லி: அதானி குழுமம், 25,000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்துடன், பெரிய சிமென்ட் நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.மத்திய அரசு, அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளை தொடர்வதால், சிமென்ட் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பெரிய சிமென்ட் நிறுவனங்களை கையகப்படுத்துவது குறித்து, அதானி குழுமம் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த 'பென்னா சிமென்ட்', குஜராத்தைச் சேர்ந்த 'சவுராஷ்டிரா சிமென்ட்', ஜெய்பிரகாஷ் அசோசியேட்சின் சிமென்ட் வணிகம் மற்றும் ஏ.பி.ஜி., ஷிப் யார்டுக்கு சொந்தமான 'வத்ராஜ் சிமென்ட்' உள்ளிட்ட பல சிமென்ட் நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதலீட்டுக்காக 24,900 கோடி ரூபாயை இக்குழுமம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 'ஆதித்ய பிர்லா' குழுமத்தின் 'அல்ட்ரா டெக்' நிறுவனத்தை விட, மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக மாறுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக இம்முயற்சி பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை