மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு பயன்கள் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல்?
22 hour(s) ago | 2
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
22 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
22 hour(s) ago
புதுடில்லி : சீனாவை சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான, 'லீப்மோட்டார்' இந்திய சந்தையில் நுழைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தேசிய பாதுகாப்பு காரணங்களை கருதி, இந்தியாவில் சீன நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி., குழுமத்தை சேர்ந்த 'எம்.ஜி., மோட்டார்' நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக, ஜெ.எஸ்.டபிள்யு., குழுமத்துடன் கூட்டு சேரும் நிலை ஏற்பட்டது. இதேபோல், சீனாவை சேர்ந்த மற்றொரு மின்சார வாகன தயாரிப்பாளரான பி.ஒய்.டி., உள்நாட்டு வாகன தயாரிப்பாளருடன் இணைந்து, இந்தியாவில் மின் வாகன தயாரிப்பை துவக்க முயன்ற போதிலும், முதலீட்டுக்கான அரசு ஒப்புதல்களை பெற இயலவில்லை. இந்த நிலையில், சீனாவை சேர்ந்த லீப்மோட்டார் நிறுவனம், 'ஸ்டெல்லான்டிஸ்' குழுமத்துடன் இணைந்து, இந்திய வாகன சந்தையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டெல்லான்டிஸ் குழுமம், உலகின் முன்னணி வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றாகும். 'சிட்ரோன், ஜீப், கிரிஸ்லர், பியட்' போன்ற பல்வேறு பிராண்டுகள், இதன் கீழ் அடங்கும்.லீப்மோட்டார் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, 13,280 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக, ஸ்டெல்லான்டிஸ் குழுமம், கடந்தாண்டு அறிவித்தது. இந்நிறுவனங்களின் கூட்டு முயற்சி ஒப்பந்தப்படி, லீப்மோட்டார் தயாரிப்புகளை, சீனாவுக்கு அப்பால் தயாரிப்பதற்காக, லீப்மோட்டார் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.இந்த ஒப்பந்தம், இந்திய சந்தையில் நுழைவதற்கு நம்பிக்கை அளித்துள்ளதால், லீப்மோட்டர் நிறுவனம், ஸ்டெல்லான்டிஸ் குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், நிறுவனத்தின் பட்ஜெட் மின்சார வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
22 hour(s) ago | 2
22 hour(s) ago
22 hour(s) ago