உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தீபாவளி இனிப்புகளில் முந்திரிக்கு இடமிருக்குமா?

தீபாவளி இனிப்புகளில் முந்திரிக்கு இடமிருக்குமா?

புதுடில்லி: உலகளவில் முந்திரி பருப்பின் விலை உயர்வால், இந்தியாவிலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், முந்திரி விலையேற்றம், நுகர்வோருக்கு கவலை தருவதாக இருக்கிறது.'எல் நினோ' பருவநிலை மாற்றம் காரணமாக, முந்திரி உற்பத்தி செய்யும் நாடுகளில், அதன் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் டன் ஒன்றுக்கு விலை 99,600 ரூபாய் முதல் 1.08 லட்சம் ரூபாய் வரை இருந்தது, தற்போது 1.58 லட்சம் ரூபாய் முதல் 1.66 லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்தியாவின் முந்திரி நுகர்வு, ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் 7 சதவீதம் அதிகரித்துஉள்ளது. ஆரோக்கியத்தை முன்னிட்டு நுகர்வோரின் தேவை அதிகரித்துள்ளதால், சந்தை நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், முந்திரி உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், வியட்நாம், ஆப்ரிக்கா போன்ற பிற உற்பத்தி நாடுகளிலும், முந்திரி உற்பத்தி கிட்டத்தட்ட 25 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. பாதகமான வானிலை காரணமாக, முந்திரி உற்பத்தி, உலகளவில் ஏழு சதவீதம் சரிவு காணும் என, சர்வதேச கவுன்சில் கணித்துள்ளது.தொழில்துறை ஆதாரங்களின்படி, இந்திய முந்திரி சந்தையின் அளவு 2024ல், 19,920 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு டன் முந்திரி விலை 99,600 - 1.08 லட்சம் ரூபாய் வரை இருந்தது, தற்போது 1.58 லட்சம் - 1.66 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்