உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆப்ரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி : மத்திய அரசு அனுமதி

ஆப்ரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி : மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு, 2,000 டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இயக்குனரகம் தெரிவித்துஉள்ளதாவது:உள்நாட்டு வினியோகம் மற்றும் விலையேற்றத்தை தடுக்க, கடந்த 2023 ஜூலை 20ம் தேதி முதல், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும், நட்பு நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில், அந்நாடுகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதிக்கான அனுமதியை அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில், ஆப்ரிக்க நாடுகளான மலாவி மற்றும் ஜிம்பாப்வேக்கு, தலா 1,000 டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை தேசிய கூட்டு றவு ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதி அளித்து உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை