உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீனா - ஜப்பான் ரசாயனம்: வரி விதிக்க பரிந்துரை

சீனா - ஜப்பான் ரசாயனம்: வரி விதிக்க பரிந்துரை

புதுடில்லி : சீனா மற்றும் ஜப்பானில் இருந்து, நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தின் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்., பரிந்துரைத்துள்ளது. இது குறித்து வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: உள்நாட்டு தொழிலை பாதிக்கும் வகையில், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து, நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் ரசாயன இறக்குமதிக்கு, தற்காலிக பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க, இயக்குனரகம் பரிந்துரைத்துள்ளது. இந்த இரு நாடுகளில் இருந்தும் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் 'டிரைகுளோரோ ஐசோசயானுரிக்' எனும் ரசாயனம், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக, புகார் வந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த வரியை விதிக்க, மத்திய நிதியமைச்சகத்துக்கு இயக்குனரகம் பரிந்துரைக்கிறது. வரி விதிப்பு குறித்த இறுதி முடிவை, மத்திய நிதியமைச்சகம் மூன்று மாதங்களுக்குள் எடுக்கும். நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யவும், உள்நாட்டு தொழில்துறைக்கு சமமான வாய்ப்பை வழங்குவதை உறுதி செய்யவும் 'பொருள் குவிப்பு தடுப்பு வரி' விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை